
புத்ரா ஜெயா, டிச 10-
பொறுப்பற்ற தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்களை சொக்சோ
சமூக நல பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது என்று மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் தெரிவித்தார்.
இந்த சைபர் தாக்குதல் பங்களிப்பாளர்களின் நலனை பாதிக்காது என்று வலியுறுத்த விரும்புகிறேன்.
ஏனெனில் கசிந்த சொக்சோ தரவுகள் காலாவதியானவை.
இந்த சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மனிதவள அமைச்சு கவனித்து கொள்ளும் என்று உத்தரவாதம் அளிக்கிறது.
நாட்டின் நலன்கள், மக்களின் உரிமைகள், குறிப்பாக
SOCSO பங்களிப்பாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் சொன்னார்.
அடையாளம் தெரியாத தரப்பினரால் சொக்சோ சமூக பாதுகாப்பு தரவு தளம் ஊடுருவுப்பட்ட சம்பவத்தில் மக்களுக்கான அதன் சேவையில் எந்த ஒரு சுணக்கமும் இல்லை என்று சொக்சோ நிறுவனமும் உத்தரவாதம் அளித்துள்ளது.
சொக்சோ சந்தாதாரர்கள், சம்பந்தப்பட்ட வாரிசுகளுக்கான வட்டி இழப்பீடு, மாற்று திறனாளிகளுக்கான ஓய்வூதியம் நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் முறையாக வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.

