
புத்ரா ஜெயா டிச 11-
சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதலில் யாரும் தப்பிக்க முடியாது என்று மனிதவள அமைச்சர் வ. சிவக்குமார் இன்று அறிவித்தார்.
பொறுப்பற்ற தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல்களை சொக்சோ
சமூக நல பாதுகாப்பு அமைப்பு வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது பாராட்டுக்குரியது.
இந்த சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட தரப்புக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்த சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை மனிதவள அமைச்சு உறுதி செய்யும்
நாட்டின் நலன்கள், மக்களின் உரிமைகள், குறிப்பாக
SOCSO பங்களிப்பாளர்களின் உரிமைகள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்று அவர் சொன்னார்.

