மலேசியாவின் முதல் Drive thru இந்திய உணவகம் – சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது கார சாரம்

மலேசியாவின் முதல் drive thru இந்திய உணவகம் என்ற அங்கீகாரத்தை கார சாராம் பெற்றுள்ளது.

சட்டி சோறு, திருவிழா சாப்பாடு ஆகியவற்றுக்குப் பெயர் போன கார சாரம் உணவகம் மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.

பினாங்கில் அதன் 15ஆவது கிளையை மஇகாவின் தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தனர்.

வாடிக்கையாளர்கள் வாகனத்தில் இருந்தப் படி உணவை வாங்கும் எளிய முறையான drive thru திட்டம் இந்த 15ஆவது கிளையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கார சாரம் உணவகத் துறையில் அபிரிமிதமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதோடு drive thru முறையை அறிமுகப்படுத்தி சாதனை புரிந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாக டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles