ரேவதி அழகிரிசாமி சிறந்த வர்த்தருக்கான விருது பெற்றார்!!

ம.இ.கா. தேசிய தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆதரவிலும் தேசம் ஊடக குழுமத்தின் ஏற்பாட்டிலும்
சென்னையில் சென்னையில் நடைபெற்ற மாபெறும் தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் போன்ரிக் செண்டிரியான் பெர்ஹட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான ரேவதி அழகிரிசமி அவருக்கு சிறந்த வர்த்தகருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

கடந்த டிசம்பர் 2 தேதியன்று சென்னை லி மெரிடியென் ஹோட்டலின் நடைபெற்ற இந்த விருது விழாவில் இவருக்கு இந்த உயரிய விருதினை மலேசியாவில் புகழ்பெற்ற எஸ்.பி.கேர். குழுமத்தின் தோற்றுனர் டாக்டர் சத்தியபிரகாஷ் நடராஜன் எடுத்து வழங்கினார்.

போன்ரிக் செண்டிரியான் பெர்ஹட் நிறுவனம் மருத்துவ பயன்பாட்டிற்கான பிரத்தியேகமாக தயாரிக்கப்படும் மருத்துவ கை உறைகளை தயாரித்து உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்து.

பல ஆண்டுகளாக இந்நிறுவனத்தில் நிர்வாக இயக்குனராக பணியாற்றிவரும் ரேவதி, மெர்லின் ஹோட்டலின் சிறந்த பணியாளருக்கன விருதும் வென்றிருக்கிறார். மேலும் மனிதவளத்துறையிலும் சைக்கலோஜிகல் மற்றும் கவின்சளிங் துறைகளிலும் பட்டம் பெற்றவர் ஆவார்.

வர்த்தகத்தில் மேலும் பெரும் சாதனைகள் புரிந்து வரும் இவர், பொது சேவைகளிலும் முக்கியத்துவமளித்து பொதுமக்களுக்கு சேவைகளும் அவர்களுக்கு தேவையான உதவிகளையும் ரேவதி செய்து வருகிறார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles