
ம.இ.கா. மற்றும் அதன் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் ஆதரவில் தேசம் ஊடக குழுமத்தின் ஏற்பாட்டில்
சென்னையில் மாபெரும் தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா கடந்த டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
தேசம் ஊடக குழுமத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் அவர்களின் முயற்சியில் சென்னை லி மெரேடியன் ஹோட்டலில் நடைபெற்ற இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர் விருது விழாவில் ஊடகம், கலை, தொழில், வர்த்தகம், அரசு சாரா இயக்கம் என பல்வேறு துறைகளில் தனித்துவம் பெற்ற 115 சாதனையாளர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மலேசியா, இந்தியா ஆகிய இரு நாடுகளிருந்து சாதனையாளர்களை தேர்ந்தெடுத்து அவர்களின் திறமையையும் அவர்கள் புரிந்த சாதனைகளையும் அங்கிகரிப்பதோடு இல்லாமல் அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர் விருது விழா விழங்குகிறது என்று தேசம் ஊடக குழுமத்தின் தோற்றுநர் குணாளன் மணியம் தெரிவித்தார்.

இந்த விருது விழாவில் மலேசியாவைச் சேர்ந்த ஊடகத்தினர்களான தினத்தந்தி ப.புவனேஸ்வரன், மா.பவளச்செல்வன், காளிதாஸ் சுப்பிரமணியம், நம்பிக்கை தயாளன் சண்முகம், பார்த்திபன் நாகராஜன், ஆஸ்ட்ரோ அவானி உமாவதி ராமையா, ஆஸ்ட்ரோ தமிழ் செய்திகள் பிரிவின் சிவராஜ் லிங்கராஜ், ஆர்டிஎம் மோகன் சின்னசாமி, தமிழ்மலர் இரா.கோபி, ஆசை தம்பி, மக்கள் ஓசை பி.மலையாண்டி, தி.மோகன், தேசம் டிவி ரேவதி, ஹரி ஸ்ரீநிவாஸ், ஸ்டார் கணேசன், அனைவரும் விருது வழங்கி கௌரவிக்கபபட்டனர்.
மேலும் பொது சேவையை பாராட்டி எழுமின் இயக்கத்தின் மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன், டிரா மலேசியா செயலாளர் மணிவண்ணன் கந்தசாமி ஆகியோரும் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.
வர்த்தக துறையில் மலேசியாவின் வர்த்தகர்கள் போன்ரிட்ஜ் நிறுவனித்தின் நிர்வாக இயக்குனர் ரேவதி அழகிரிசாமி, இந்தியா கேட் சரவணன், ராஜி சில்க் பேலஸ் இயக்குநர் அஸ்லான், மலேசிய பிரதமர் துறையின் துணை இயக்குநர் டத்தோ அய்மான், ஈப்போ ராஜேஸ்வரி உணவக உரிமையாளர் திருமதி ராஜேஸ்வரி, தொழிலதிபர் டத்தோ பத்மநாதன், கலர்ஸ் ஆப் இந்தியா உரிமையாளர் சத்தியகுமரன், தொழிலதிபர் டத்தோ ஹரி கிருஷ்ணன், நானா பானிபூரி உரிமையாளர் டாக்டர் நானா@ நந்தனா ஆகிய அனைவரும் விருது பெற்றனர்.

விருது விழாவில் வாழ்நாள் சாதானையாளர் விருது தமிழ்நாட்டின் பத்திரிகை ஜாம்பவான் நக்கீரன் கோபால் அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த சாதனையாளர் விருதை இந்தியாவுக்கான மலேசிய தூதர் திரு.சரவணக்குமார் எடுத்து வழங்கினார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த தேசம் அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழா இரண்டாவது முறையாக சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
விழாவில் விருது பெற்றாவர்களுக்கு இந்தியாவுக்கான மலேசிய தூதர் திரு.சரவணகுமார், சாரா பாம்பே லட்சுமி ஆறுமுகம், எஸ்.பி.கேர். குழுமத்தின் தோற்றுனர் மருத்துவர் சத்தியபிரகாஷ் நடராஜன், டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன், பத்திரிகை ஜாம்பவான் திரு. நக்கீரன் கோபால் உள்ளிட்ட பிரமுகர்கள் விருதுகளை எடுத்து வழங்கினர்.
தேசம் ஊடக அனைத்துலக சாதனையாளர்கள் விருது விழாவில் இந்தியாவுக்கான மலேசிய தூதர் சரவணகுமார், எஸ்.பி.கேர். குழும தோற்றூனர் சத்தியபிரகாஷ் நடராஜன், டிரா மலேசியா தலைவர் சரவணன் சின்னப்பன், பத்திரிகை ஜாம்பவான் நக்கீரன் கோபால், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, சாரா போம்பே லட்சுமி ஆறுமுகம் உட்கபட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

