
சிம்மோர் சீக்கிய ஆலய மேம்பாட்டிற்கு தம்புன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரதமருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 10 ஆயிரம் ரிங்கிட் நிதுயுதவி வழங்கி உதவியதாக இத்தொகுதியுன் மக்கள் சேவை மையத்தின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் கூறினார்.
இந்த சீக்கிய ஆலய நிர்வாகத்தினர் ஆலயத்தில் ஆன்மீக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும், ஆலய மேம்பாட்டு பணிக்கும் மானியத்திற்கு விண்ணப்பம் செய்துள்ளனர். அவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் பொருட்டு முதல் கட்டமாக இந்த நிதியுதவியை வழங்கியதாக அவர் குறிப்பிட்டார்.
பிரதமர் எந்தவொரு பாகுபாடு இன்றி இத்தொகுதி் மக்களுக்கு சேவையாற்றி வருகிறார். அவருக்கு அனைத்து மக்களும் முக்கியமானவர்கள் என்பதோடு மக்களின் வாழ்வாதாரத்திற்கு முன்னுரிமை வழங்கி வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.

