குத்து சண்டை போட்டியில் கேஷ்வின் தர்மராஜா தங்கத்தை வென்றார்!

கோலாலம்பூர், டிச.26-
அல்டிமேட் பீட்டவுன் 44 குத்துச் சண்டை போட்டியில் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட பிரிவில் பங்கு பெற்று கேஷ்வின் தர்மராஜா தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

கடந்த சனிக்கிழமை ஜொகூரிலுள்ள சிட்டி பிளாசா ஜொகூர் பாருவின் நடைபெற்ற இப்போட்டியில் வயதிற்கு ஏற்ற பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

அரேனா பி-இல் 18 வயதிற்கு கீழ்ப்பட்ட போட்டியில் களமிறங்கிய கேஷ்வின் தர்மராஜா தன்னை எதிர்த்து போட்டியிட்ட முகமட் அமாரை வென்று தங்கப் பதகத்தை தட்டிச் சென்றார்.

சிறுவயதில் இருந்து குத்துச்சண்டையில் அதிகம் ஆர்வம் கொண்ட கேஷ்வினை அவரின் பெற்றோர் அதற்கான பயிற்சி அகாடமியில் சேர்த்து திறமையை வளர்த்துள்ளனர். இதே போன்று அண்மையில் ஜொகூரில் நடைபெற்ற மற்றொரு போட்டியிலும் கேஷ்வின் தங்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

தற்காப்பு கலைத்துறையில் அதிகம் ஆர்வம் கொண்ட கேஷ்வின், இது போன்ற பல போட்டிகளில் கலந்து கொண்டு சாதனை படைக்க வேண்டும் என்றும் வரும் காலத்தில் கேஷ்வின் நாட்டை பிரதிநிதித்து விளையாடுவதை தாங்கள் பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் இருப்பதாகவும் கேஷ்வினின் பெற்றோர் தர்மராஜாவும் சுமதியும் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles