
ஈப்போ, டிச.28:
தம்புன் நாடாளுமன்ற தொகுதியில் மித்ரா வழங்கிய 1 இலட்சம் ரிங்கிட் நிதியுதவி வாயிலாக 10 பி40 பல்கலைக்கழக மாணவர்களுக்கு உயர்தரமான மடிக்கணினியை தம்புன் நாடாளுமன்ற மக்கள் சேவை மையம் வழங்கி உதவியதாக இத்தொகுதியின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் கூறினார்.
இந்நிதியை பயன்படுத்தி மேலும் 25 இந்திய சிறுதொழில் வியாபாரிகளுக்கு நிதியுதவியும், பொருளுதவியும் வழங்கப்படும். இவர்கள் அனைவரும் பி40யை சேர்ந்த இந்திய குடும்பத்தினர்கள் என்று அவர் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, தம்புன் தொகுதியில் 5 தமிழ்ப்பள்ளிகளுக்கும் இரு திறன் பலகைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்தாண்டும் தொடர்ந்து வழங்கப்படும். அத்துடன், மீண்டும் பள்ளிக்கு போகலாம் திட்டத்தில் மாணவர்களுக்கு பள்ளி சீருடைகள் மற்றும் பள்ளி உபகரணங்களும் வழங்கி உதவப்பட்டுள்ளது. அதோடு ஒவ்வொரு தமிழ்ப்பள்ளிக்கும் விளையாட்டு போட்டியை நடத்துவதற்கு 5 ஆயிரம் ரிங்கிட் வழங்கி உதவியுள் ளதாக அவர் சொன்னார்.
அத்துடன், இத்தொகுதியில் இருக்கும் ஆலயங்களின் தேவையை அறிந்து நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. அதோடு வீடுகளும் பி40 குடும்பத்தினருக்கு மறுசீரமைப்பு செய்து தரப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்

