டத்தோஸ்ரீ அன்வாரின் ஆட்சியை கவிழ்க்க சதி!

ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் ஆட்சியை கவிழ்க்க எதிர்க்கட்சியினர் உட்பட அரசாங்க நபர்கள் சிலர் இணைந்து சதித் திட்டம் தீட்டியுள்ளதாக தொடர்பு துறை இலாகா ஜே.கோம் துணை இயக்குனர் இஸ்மாயில் யூசோப் தெரிவித்தார்.

Langkah Sheraton போன்று langkah Dubai என்பதை அரங்கேற்ற திட்டம் போடப்பட்டுள்ளது.

பெரிக்காத்தான் நேஷ்னலை சேர்ந்த முக்கிய தலைவர்களும் அரசாங்கத்தைச் சேர்ந்த சில முக்கிய நபர்கள் சிலரும் அண்மையில் விடுமுறைக்காக துபாய் நாட்டிற்குச் சென்றுள்ளனர்.

அன்வாரை ஆதரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களை எதிர்க்கட்சி வசம் திருப்ப பேரம் பேசுவதற்கு சிலருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதோடு, ஆட்சியை கவிழ்க்க தேதி முதற்கொண்டு முடிவெடுக்கப் பட்டு விட்டதாக எதிர் தரப்பு பேச்சாளரிடமிருந்து தகவல் கசிந்துள்ளது.

தொடர்பு துறையின் பொறுப்பில் இருப்பதால், கிடைத்த தகவலை தெரிவிக்க வேண்டிய கடப்பாடு தமக்கு உண்டு என்பதால் இதனை அம்பலப்படுத்தியதாக இஸ்மாயில் யூசோப் கூறியுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles