மலேசிய எம்ஜிஆர் சிலம்ப கழகத்தின் சார்பில்தேர்ச்சி பெற்ற7 மாணவர்களுக்குகறுப்பு பெல்ட்!

கோலாலம்பூர், ஜன 8-
நாட்டில் மிகவும் துடிப்பு மிக்க சிலம்பக் கழகங்களில் ஒன்றாக மலேசிய எம்ஜிஆர் சிலம்ப கழகம் விளங்குகிறது.

நூற்றுக்கணக்கான சிலம்ப மாணவர்களை உருவாக்கிய பெருமையை எம்ஜிஆர் சிலம்ப கழகத்திற்கு உண்டு.

அந்த வகையில் இப்போது முழுமையாக தேர்ச்சி பெற்ற ஏழு மாணவர்களுக்கு மலேசிய எம்ஜிஆர் சிலம்ப கழகம் கருப்பு பெல்ட் அணிவித்து கெளரவித்துள்ளது.

சிவசங்கர் சுகுமாறன், யூகன் சரவணன், ஸ்ரீ சன்மித்திரன் தேவராஜா, கமலேஸ்வரி முருகன், லிங்கேஸ் மாரிமுத்து, கங்காஸ்ரீ மாரிமுத்து, விஸ்வேஸ்வரன் பன்னீர் செல்வம் ஆகியோர் கறுப்பு பெல்ட் பெற்றுள்ளனர்.

இந்த மாணவர்கள் பேராக் தஞ்சோங் மாலிம் மற்றும் சிலீம் ரீவரை சேர்ந்தவர்கள் ஆவர்.

மலேசிய எம்ஜிஆர் சிலம்ப கழகத்தின் மகாருகு டி.எஸ்.மோகனராமன், எஸ்.சசிதரன் துணை மாஸ்டர் எஸ். குமரவேல் ஆகியோரிடம் முழுமையாக சிலம்ப கலையை கற்று இவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles