நாடு விரைவாக போட்டியிடும் வகையில் டிஜிட்டல் அமைச்சு டிஜிட்டல் மாற்ற முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது!பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவிப்பு

புத்ராஜெயா, ஜன.8-
நாடு பின்தங்காமல் இருக்கவும், விரைவாகப் போட்டியிடவும், டிஜிட்டல் மாற்ற முயற்சிகளை முன்னெடுப்பதற்காக டிஜிட்டல் அமைச்சு உருவாக்கப்பட்டது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று அறிவித்தார்.

டிஜிட்டல் துறையில் கவனம் செலுத்தாமல் மலேசியா மற்ற நாடுகள் அடையும் வேகத்துக்கு ஏற்ப விரைவாகப் போட்டியிட முடியாது என்று நினைத்ததால், கடந்த மாதம் அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து டிஜிட்டல் அமைச்சு உருவாக்கப்பட்டது என்றார்.

“டிஜிட்டல் திட்டம் முன்பை விட தீவிரமாக செய்யப்பட வேண்டும், இல்லையெனில் நாம் பின்தங்குவோம்,” என்று அவர் இன்று பிரதமர் துறை (ஜேபிஎம்) உறுப்பினர்களுடனான கூட்டத்தில் கூறினார்.

பொருளாதார வளர்ச்சி, டிஜிட்டல், கல்வி மற்றும் சுகாதாரத்தின் தரத்தை மேம்படுத்தும் ஆர்வத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

“டிஜிட்டல் என்பது மதிப்பு பற்றிய கேள்வியை உள்ளடக்கியது. இது புதிய தொழில்நுட்பத்தின் கேள்வியை வலியுறுத்தும் ஒரு புதிய திறன்ச
ஆனால் நாம் பூமியில் வேரூன்றி இருக்க வேண்டும். எங்களிடம் நமது நம்பிக்கை அமைப்பு மற்றும் நமது மதிப்புகள் உள்ளன. இதை நாம் அணுக வேண்டும் என்று அவர் கூறினார்.

இப்போது அமைச்சரவையில் டிஜிட்டல் துறை அமைச்சராக கோபிந்த் சிங் டியோ பொறுப்பேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles