புதிய நிர்வாகத்துடன், புதிய பொலிவுடன் கந்தான் காளியம்மன் ஆலயம்!

ஈப்போ, ஜன. 9: பேராக் மாநிலத்தில் கந்தானில் அமைந்துள்ள ஸ்ரீ மகா காளிம்மன் ஆலயம் மிகவும் பிரசித்து பெற்றது.

இந்த ஆலயம் பல்லாண்டுகளாக நிர்வாக பிரச்சினை இழுபறி நிலைப்பாட்டில் இருந்து வந்தது.

இந்த ஆலய நிர்வாகத்தை தற்காலிகமாக பேராக் திவால் இலாகா வழிநடத்தி வந்தனர் என்று தம்புன் நாடாளுமன்ற தொகுதியின் பிரதமரின் சிறப்பு அதிகாரி ஆர்.சுரேஸ் குமார் கூறினார்.

நேற்று இங்குள்ள ஈப்போ திவால் இலாகாவில் நடைபெற்ற கூட்டத்தில் இந்த திவால் இலாகாவின் இயக்குநர் டத்தின்ஸ்ரீ சுகாய்மா முகமட் நீர்,
கெ. தியாகராஜன் அணியினர் இனிவரும் காலங்களில் இந்த கந்தான் ஆலயத்தை நிர்வாகிப்பார்கள் என்று தீர்ப்பு வழங்கினார் என்று அவர் குறிப்பிட்டார்.

அதன் அடிப்படையில் இனி கந்தான் காளியம்மன் ஆலய நிர்வாகத்தை தியாகராஜன் அணியினர் நிர்வகிப்பார்கள்.

இந்த ஆலயத்தை நேர்த்தியாகவும், முறையாகவும் இந்த தலைமையிலான அணியினர் நிர்வகிப்பார்கள் என்று அவர் சொன்னார்.

இந்த ஆலயம் இனிவரும் காலங்களில் எந்தவொரு தரப்பினரின் ஆதிக்கம் இன்றி சுயமாக பொதுமக்களின் ஆதரவு மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் செயல்படவுள்ளது.

ஆகையால் இந்த ஆலய மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு பொது மக்களின் வற்றாத ஆதரவு அவசியம் தேவைப்படுகிறது என்று பேராக் திவால் இலாகாவின் இயக்குநர் டத்தின்ஸ்ரீ சுகாய்மா முகமட் நோர் தேர்வு செய்த கெ. தியாகராஜன் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles