
கோலாலம்பூர், ஜன 13-
ஜசெக தலைமை செயலாளர் மற்றும் போக்குவரத்து அமைச்சர் அந்தோனி லோக் இன்று பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு சிறப்பு வருகை புரிந்தார்.
சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு, டி. கண்ணன் ஆகியோர் இதில் கலந்து சிறப்பித்தனர்.
ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் தலைவர் டான்ஸ்ரீ ஆர் நடராஜா தலைமையிலான நிர்வாகத்தினர் அமைச்சர் அந்தோனி லோக், ராயுடுவுக்கு சிறப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

