
செலாயாங் ஜன 13-
பத்துமலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு முதல் முறையாக ஜனவரி 24,25 ஆம் ஆகிய இரு நாட்களுக்கு இலவச கேடிஎம் ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளதாக இன்று பத்துமலை முருகன் திருத்தலத்திற்கு சிறப்பு வருகையளித்த போக்குவரத்து துறை அமைச்சர் அந்தோனி லோக் தெரிவித்தார்.
25ஆம் தேதி தைப்பூச விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு 24ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் மறுநாள் 25ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இந்த இலவச ரயில் சேவை வழங்கப்பட்டுள்ளது.
மேலும் அதே இரு நாட்களுக்கு தலைநகரிலும் பினாங்கிலும் ராப்பிட் பேருந்து சேவை இலவசமாக வழங்கப்படவுள்ளதாக அவர் சொன்னார்.

