
ஜொகூர் பாரு,பிப் 20-
பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 21 தமிழ்ப் பள்ளிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது என பத்திரிக்கை செய்தி குறித்து கருத்துரைத்த திரு சந்திர சேகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்த பள்ளிகள் இனி எந்த நேரத்திலும் மூடப்படும் அபாயத்தில் உள்ள சூழ் நிலையில் அதனை எவ்வாறு கையாள போகிறர்கள் என்பதை ஒட்டுதெத்த இந்திய சமுதாயமே எதிர்பார்த்து கொண்டுயிருக்கிறது என கூறிப்பிட்ட தமிழ் ஆர்வலருமான திரு சந்திர சேகரன்,
சிலாங்கூர் மாநிலத்தில் லீமா பிளாஸ் தமிழ்ப் பள்ளியில் 5 மாணவர்கள்
கெடா மாநிலத்தில் 5 பள்ளிகள், பேராக் மாநிலத்தில் 8 பள்ளிகள், பகாங் மாநிலத்தில் 4 பள்ளிகள் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கிறது.
ஜோகூர் மாநிலத்தில் கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி (7 மாணவர்கள்), ஜோகூர் லாயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ( 5 மாணவர்கள்) மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுங்கை செபிலாங் தோட்ட தமிழ்ப் பள்ளியில் 7 மாணவர்கள் உள்ளனர்.
இந்த பள்ளிகள் காப்பாற்றபட வேண்டும் என்றால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.
இந்தியர்கள் அதிகம் வசிக்கும் இடங்களுக்கு இந்த பள்ளிகளை இடமாற்றம் செய்ய அரசாங்கம் இதுவரை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று ஜொகூர் மாநில சமூக சேவையாளர் சந்திரசேகரன் ஆறுமுகம் கேள்வியை முன் வைத்துள்ளார்.
இந்தியர்களின் வாக்குகள் மூலம் பக்கத்தான் ஹராப்பான் ஆட்சிக்கு வந்தது.
ஆகவே இப்போது ஆட்சியில் இருக்கும் பக்கத்தான் ஹராப்பான் தமிழ்ப் பள்ளிகளை இடமாற்றம் செய்ய என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள இந்திய சமுதாயம் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறது என்று அவர் சொன்னார்.

