
பந்திங, பிப் 20-
அர்ஜுனன் செல்லப்பெருமாள், வயது 59. கடந்த 04.10.2022 அன்று வேலை முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பும் போது சாலை விபத்தில் சிக்கினார்.
விபத்தின் விளைவாக, அர்ஜுனன் தலையில் பலத்த காயம் அடைந்தார்
அவர் Kossan Latex Industries (M) Sdn Bhd இல் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார்.
இந்த விபத்தால் அவர் வேலை செய்ய முடியாமல் வருமானத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
.அர்ஜுனன் 53 வயதான அவரது மனைவி புஸ்பா பெரியசாமியால் கவனித்துக் கொள்ளப்படுகிறார்.
அவர் அடைந்த காயங்களுக்கு நிரந்தர ஊனமுற்ற நலன்களை வழங்க சொக்சோ நிறுவனத்தின் சமூக நல பாதுகாப்பு அனுமதிக்கிறது.
அர்ஜுனனை எப்பொழுதும் கவனித்துக்கொள்வதற்காக நிலையான பராமரிப்பு உதவித்தொகையைப் பெறத் தகுதியானவர் என்று மருத்துவர்கள் முடிவு செய்தனர்.
பந்திங் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர்
ராயுடு மற்றும் Klang SOCSO அலுவலக மேலாளர் தவமணி ராமலிங்கம் மற்றும் சொக்சோ அதிகாரிகள் நேரடியாக அர்ஜுனன் இல்லத்திற்கு விரைந்து சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிதியுதவியை வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது

