
புத்ரா ஜெயா, பிப் 19-
தோட்டத் தொழில துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனியின் அரசியல் செயலாளர் டத்தோ ரிசால்மானுடன் விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் மற்றும் விலாயா மாநில செயலாளர் காமராஜ் இன்று மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த சந்திப்பின் போது விலாயா மாநில மைபிபிபி கட்சி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்து விரிவாக பேசப்பட்டதாக சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
டத்தோ ரிசால்மானுடன் நடத்தப்பட்ட இந்த சந்திப்பு நல்ல பலனை தந்தது.
மேலும் விலாயா மாநில மைபிபிபி மேற்கொள்ளும் மக்கள் நலன் நடவடிக்கைகளுக்கு டத்தோ ரிசால்மான் ஆதரவு தர முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது என்று சத்தியா சுதாகரன் தெரிவித்தார்.
தற்போது விலயா மாநில மைபிபிபி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் சொன்னார்.

