
கோலாலம்பூர் பிப் 19-
நாட்டில் மொத்தம் 529 தமிழ்ப் பள்ளிகள் உள்ளன. இதில் பத்துக்கும் குறைவான மாணவர்களை கொண்டிருக்கும் 21 தமிழ்ப் பள்ளிகள் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தில் லீமா பிளாஸ் தமிழ்ப் பள்ளியில் 5 மாணவர்கள் உள்ளனர்.
கெடா மாநிலத்தில் 5 பள்ளிகள், பேராக் மாநிலத்தில் 8 பள்ளிகள், பகாங் மாநிலத்தில் 4 பள்ளிகள் இதில் அடங்கும்.
ஜோகூர் மாநிலத்தில் கோமாளி தோட்டத் தமிழ்ப்பள்ளி (7 மாணவர்கள்), ஜோகூர் லாயாங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ( 5 மாணவர்கள்) மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சுங்கை செபிலாங் தோட்ட தமிழ்ப் பள்ளியில் 7 மாணவர்கள் உள்ளனர்.
இந்த பள்ளிகள் காப்பாற்றபட வேண்டும் என்றால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டும்.

