
கோலாலம்பூர், பிப் 20 –
பணியிட மனநலப் பிரச்சினைகள் தொடர்பாக மலேசியாவின் முதல் தொழில்சார் மனநல முதலுதவி பயிற்சித் திட்டத்தை தேசிய தொழில் பாதுகாப்பு மற்றும் சுகாதார நிறுவனம் (நியோஷ்) அறிமுகப்படுத்தியுள்ளது.
மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் நேற்று இந்த திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற 24ஆவது தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதார மாநாடு மற்றும் கண்காட்சியில் (COSH) பேசிய மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம், விழிப்புணர்வு இல்லாததால் 2022 தேசிய தொழில்சார் விபத்து மற்றும் நோய் புள்ளிவிவரங்களில் ஒரு வழக்கு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
“இது மனநோய் வழக்குகள் இல்லாததால் அல்ல, மாறாக இது மனநலம் மற்றும் சாத்தியமான தீர்வுகள் பற்றிய விழிப்புணர்வின் பற்றாக்குறையைக் காட்டுகிறது என்று குறிப்பிட்டார்.

