PERNAS வழங்கும் வர்த்தக வாய்ப்புகளை இந்தியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்

கோலாலம்பூர்: பிப். 20-
தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சகத்தின் (KUSKOP) கீழ் உள்ள நிறுவனமான Perbadanan Nasional Bhd (PERNAS), 2021 முதல் 2025 வரையிலான ஐந்து ஆண்டுகளுக்குள் 5,000 ஃபிரன்சாய்ஸ் தொழில்முனைவோரை உருவாக்க இலக்கு நிர்ணயித்துள்ளது

.ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் கால்பதிப்பவர்களுக்கு பெர்னாஸ் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.

இந்த வாய்ப்புகளை இந்திய சமுதாயம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர். இரமணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

பெர்னாஸ் எனப்படும் பெர்பாடானான் நேஷ்னல் பெர்ஹாட் கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.

கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெர்னாஸ் உரிய வழிகாட்டல்களை வழங்கி வருகிறது.

குறிப்பாக பயிற்சிகள், நிதியுதவுகள் உட்பட அனைத்து உதவிகளையும் பெர்னாஸ் வழங்கி வருகிறது என்று அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles