
கிள்ளான், பிப் 23-
இந்நாட்டில் இனவாத கருத்துக்கள் மற்றும் எண்ணங்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் வி. கணபதிராவ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கிள்ளான் நியூ பாம் க்ரோவ் உணவகத்தில் தாமான் கிள்ளான் குடியிருப்பாளர்கள் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சீனப் புத்தாண்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்தார்.
சமூகங்களுக்கிடையில் ஒருமித்த மதிப்பை வளர்க்கும் முயற்சியில் குடியிருப்போர் சங்கங்களின் முக்கியத்துவத்தை நான் எப்போதும் பாராட்டுகிறேன் என்று அவர் தமது உரையில் குறிப்பிட்டார்.
குறிப்பாக நம் நாட்டில் இனவாத எண்ணங்கள் முற்றாக அழிக்கப்பட வேண்டும் என்றார்.
Dato Goh Yeow Chong (Penasihat Kehormat), Yeo Tiong Guan (Penasihat), Dato Yeong Chee Wei (Penasihat Undang-undang), Dato Wong Boon Sim PJK (Pengerusi), Penny Yeo (Naib Pengerusi), Jenny Loh (Setiausaha), Dato Khoo Hock Leong, Dato Gan, Sam Yong, Saudara Jacky Ang (Ahli Majlis MBDK), dan Saudara Gan (Ahli Majlis MBDK).), மற்றும் சகோதரர் கான் (MBDK கவுன்சில் உறுப்பினர் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

