
கோலாலம்பூர், பிப் 24-
நான் மனிதவள அமைச்சராக பதவி வகித்த காலத்தில்
மனிதவள மேம்பாட்டுக் கழகம் (எச்.ஆர்.டி.கோர்ப்)
கடந்தாண்டு 220 கோடி வெள்ளியை லெவி தொகையாக வசூலித்திருப்பதை கண்டு பெரிதும் அடைகிறேன் என வ. சிவகுமார் தெரிவித்தார்.
என்னுடைய தலைமைத்துவத்தில் கடந்த ஆண்டு சொக்சோ நிறுவனம் 1.8 பில்லியன் லாபத்தை ஈட்டியது.
இப்போது எச்ஆர்டி கோர்ப் நிறுவனம் 220 கோடி வெள்ளியை லெவியாக வசூல் செய்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்.
அதற்கு முந்தைய ஆண்டில் வசூலிக்கப்பட்டத் தொகை 181 கோடி
வெள்ளியாக மட்டுமே இருந்தது.
கடந்த 1993ஆம் ஆண்டு எச்.ஆர்.டி.கோர்ப் தொடங்கப்பட்டது முதல்
வசூலிக்கப்பட்ட தொகையில் மிக அதிகமானதாக இரு விளங்குகிறது.
கடந்தாண்டு எச்.ஆர்.டி.கோர்ப். 178 கோடி வெள்ளி மதிப்பிலான நிதியுதவி
மானியங்களை அங்கீகரித்துள்ளதோடு 22 லட்சம் பயிற்சித்
திட்டங்களுக்கான ஏற்பாடுகளையும் செய்ததுள்ளதை பெரிதும் பாராட்டுகிறேன்.
எச்ஆர்டி கோர்ப் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றிக் கொண்டிருக்கும் அதன் தலைமை செயலாளர் டத்தோ வீரா சாகுல் ஹமீது, அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை பெரிதும் பாராட்டுகிறேன் என்று அவர் சொன்னார்.

