டாக்சி -பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கு சொக்சோ சமூகப் பாதுகாப்பு திட்டம்

புத்ராஜெயா, பிப் 24=
அடுத்த மாதம் முதல், 35,000 டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் 18,000 பள்ளி பேருந்து ஓட்டுநர்கள் சொக்சோ பங்களிப்பை முழுமையாகப் பெறுவார்கள் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்தார்.

பங்களிப்பில் 90 சதவீதம் நிதி அமைச்சகத்தின் ஒதுக்கீட்டின் மூலம் நிதியளிக்கப்படும் என்றும் மீதமுள்ள 10 சதவீதம் ஒரு வருட காலத்திற்கு மடாணி போக்குவரத்து அமைச்சகத்தால் செலுத்தப்படும்.
“டாக்சி ஓட்டுநர்கள், இ-ஹெய்லிங், பி-ஹெய்லிங் மற்றும் பலவற்றிற்கு 90 சதவிகிதம் வரை பங்களிக்க நிதி அமைச்சகம் சொகேசோவுக்கு RM100 மில்லியன் நிதியை வழங்கியுள்ளது..
அவர்களுக்குச் சமூகப் பாதுகாப்பை வழங்குவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும். அதாவது விபத்து ஏற்பட்டால், இத்திட்டம் அவர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் உதவும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles