
செபராங் பிறை, பிப் 24-
National MIFA Beyond Junior U14 football போட்டி இன்னும் நாளையும் மலாக்காவில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் பங்கேற்க பினாங்கு ஜூனியர் பெண்கள் கால்பந்து குழு நேற்று மலாக்காவை நோக்கி புறப்பட்டது.
கடந்த ஆண்டு பினாங்கு மாநில பெண்கள் கால்பந்து போட்டியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 12 மற்றும் 13 வயது சிறுமிகள் இம்முறை பினாங்கு குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
சவால் நிறைந்த இந்த போட்டியில் சாம்பியன் கிண்ணத்தை வெல்ல பினாங்கு குழு போராடும் என்று பினாங்கு மாநில இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர்
ஸ்ரீ சங்கர் தெரிவித்தார்.

