தெப்ராவ் தோட்ட தமிழ்ப்பள்ளி திடலுக்கு அடையாளம் காட்டப்பட்ட நிலத்தின் நிலை என்ன!?

ஜொகூர் பாரு, பிப் 24-
தெப்ராவ் தோட்ட தமிழ்ப்பள்ளியின் திடலுக்கு அடையாளம் கணபட்ட நிலத்தின் உண்மை நிலைவரம் என்ன என்று சமூக ஆர்வலரான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் கேள்வியை எழுப்பியுள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு “தெப்ராவ் தோட்ட தமிழ்ப்பள்ளி நில விவகாரம் சுமூகமாக தீர்வு காணப்பட்டுவிட்டது” என பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டார்கள்

அந்த நிலத்தின் நிலவரத்தை தற்போதைய ஆட்சிகுழு உறுப்பினர்கள் பெற்றோர்களுக்கு, பொதுமக்களுக்கும் தெளிவாக தெரிவிக்க வேண்டும் .

இந்த நிலம் என்னவானது, நிலம் இருக்கிறதா இல்லையா என்பது பற்றி தெரிந்து கொள்ள நாங்கள் ஆவலோடு இருக்கிறோம்.

ஆகவே அந்த நில விவகாரத்தில் சம்பத்தப்பட்ட அனைத்து தரப்பினரும் உண்மையை செல்ல வேண்டும் என்று கேட்டு கெள்வதாக தமிழ் ஆர்வலருமான திரு சந்திர சேகரன் ஆறுமுகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles