
கோலசிலாங்கூர், பிப் 24-
அண்மையில் மரணமடைந்த அமரர் பாலா வயது 66 மற்றும் அமரர் இராமசந்திரன் வயது 78 ஆகியோர் வீடுகளுக்கு கோலசிலாங்கூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தீபன் சுப்பிரமணியம் வருகை புரிந்து ஆறுதல் கூறினார்.
புக்கிட் மெலாவத்தி இந்தியத் தலைவர் கலைக் குமார் மற்றும் கோல சிலாங்கூர் நகராண்மைக் கழக உறுப்பினர் விக்கி ஆகியோரும் உடன் சென்றனர்.
அந்த குடும்ப பிள்ளைகளுக்கு கல்விக்கான உதவித் தொகையை தீபன் சுப்பிரமணியம் வழங்கினர்.
அந்த 2 வீடுகளிலும் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து உதவித் தொகை வழங்கப்பட்டது.
அதே வேளையில் அங்கு நோய்வாய் பட்டிருந்த மேலும் இருவர் வீட்டிற்கு சென்று நலம் விசாரித்தார்.
அவர்கள் வீட்டில் உயர்க் கல்வி படிக்கும் மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் ரி.ம. 1,000.00 உதவிக்கு விண்ணப்பிக்க ஆலோசனை வழங்கப்பட்டது.
அதே வேளையில் இடை நிலைப் பள்ளி மற்றும் ஆரம்ப பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ரி.ம 100.00 கிடைக்க ஆவன செய்வதாக அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தனது சொந்த நிதியாக ரி.ம. 200.00 கொடுத்து தீபன் சுப்பிரமணியம் உதவினார் என்பது குறிப்பிடத்தக்கது.

