
சுங்கை பூலோ, பிப் 24-
வரும் மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை சுங்கை பூலோ Stand Mall kota Damansara பேராங்காடியில் தெங்குன் மடானி கண்காட்சி மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
சுங்கை பூலோ நாடாளுமன்ற தொகுதி சேவை மையத்தின் ஆதரவோடு நடைபெறும் இந்த கண்காட்சியை தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு கழகத்தின் துணை அமைச்சர் டத்தோ ஆர் இராமணன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கிறார்.
தனது அமைச்சின் கீழ் இயங்கும் தெங்குன் உதவிகளை எளிதில் எவ்வாறு பெற்றுக் கொள்வது தொடர்பில் போதுமான தகவல்களை இங்கு பெற்றுக் கொள்ளலாம் என்று டத்தோ இராமணன் தெரிவித்தார்.
வணிகர்களுக்கும் அமைச்சுக்கும் இடையே நல்லுறவை வலுப்படுத்திக் கொள்ளும் இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக சுங்கை பூலோ நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் சொன்னார்.

