தித்திவங்சா தொகுதியில் 8,500 மாணவர்களுக்கு பற்றுச் சீட்டுகள் அன்பளிப்பு!

கோலாலம்பூர் பிப் 24-
மார்ச் 11 ஆம் தேதி 2024; ஆம் ஆண்டுக்கான பள்ளி தவணை காலம் தொடங்கும் வேளையில் தித்தி வங்சா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 8,500 மாணவர்களுக்கு தோட்டத் தொழில துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி புத்தகப் பைகளை வழங்கினார்.

இன்று காலையில் நிகழ்வில் தாமான் மலூரியில் நடைபெற்ற முதல் நிகழ்வில் 2,500 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் மற்றும் தலா 100 வெள்ளி பற்றுச் சீட்டுகளை அவர் வழங்கினார்.

இந்த பற்றுடு சீட்டுகளை கொண்டு மாணவர்கள் இயோன் பேராங்காடியில் பள்ளி சீருடைகளை வாங்கி கொள்ளலாம் என்று டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி தெரிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் பள்ளி தவணை காலத்தை முன்னிட்டு தித்தி வங்சா நாடாளுமன்ற தொகுதியில் உள்ள வசதி குறைந்த மாணவர்களுக்கு பற்றுச் சீட்டுகளையும் புத்தக பைகளையும் வழங்கி வருவதாக அவர் சொன்னார் .

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles