
கோலாலம்பூர் பிப் 24-
தமிழர்களின் பாரம்பரிய உருமிமேள இசையை கேவலப்படுத்தும் வகையில் பேசிய நபருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று மலேசிய உருமி மேளம் இசைக்கலைஞர்கள் சங்கம் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் டிக்டோக்கில் மூன்று நபர்கள்
இழிவான முறையில் உருமிமேள இசையை கேவலப்படுத்தும் வகையில் பேசியுள்ளனர்.
இவர்களில் ஒருவரை நேரடியாக அழைத்து மன்னிப்பு கேட்க சொன்னோம். ஆனால் அவர் நையாண்டித்தனமாக மன்னிப்பு கேட்டு கொண்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று
மலேசிய உருமி மேளம் இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவர் சிவா தெரிவித்தார்.
நாடு தழுவிய அளவில் 80க்கும் மேற்பட்ட போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
நமது இனத்தைச் சேர்ந்தவர்களே நமது இசையை கேவலப்படுத்தும் செயல் கண்டிக்கத்தக்கது என்று அவர் சொன்னார்.
இதனிடையே சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக letter of demand அனுப்பி வைக்கப்படும் என்று மலேசிய உருமி மேளம் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் தினேஷ் முத்தல் தெரிவித்தார்.
சமயத்தையும் கலாச்சாரத்தையும் இழிவு படுத்தும் செயலை ஏற்றுக் கொள்ள முடியாது என்று அவர் சொன்னார்.
வரும் செவ்வாய்க்கிழமை அவர்களுக்கு வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
ஏழு நாட்களில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க தவறினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் சொன்னார்.
புரட்சி சட்ட நடவடிக்கை குழுவின் தலைவர் உமாகாந்தன் பேசுகையில் சமயத்தையும் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் இழிவு படுத்தும் நபர்களின் திமீர் தனத்தை அடங்கும் வகையில் இந்த சட்ட நடவடிக்கை அவசியமாகும் என்றார்
மலேசிய உருமி மேளம் இசைக்கலைஞர்கள் சங்கத்தின் ஆலோசகர் கவிமாறன் பேசுகையில் நம் இனத்தவர்களே நம் மதத்தையும் கலாச்சாரத்தையும் கேவலப்படுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
சம்பந்தப்பட்டவர்கள் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்றார்.
பத்து ஆண்டுகளுக்கு மேலாக உருமி மேள இசைக்கலைஞர்கள் சங்கம் உருமிமேள இசையை பேணி காத்து வருகிறது என்றும் அவர் கூறினார்.

