
கோலாலம்பூர், மார்ச் 1 –
இந்நாட்டில் இந்திய சமுதாயம் எதிர் நோக்கி இருக்கும் குடியுரிமை பிரச்சினைகள் தொடர்பாக டிரா மலேசிய நேற்று அமைச்சர்களுக்கு முழு விளக்கம் அழித்தது.
நேற்று நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற சிறப்பு சந்திப்பு கூட்டத்தில் டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ, சட்டத் துறை துணை அமைச்சர் எம் குலசேகரன் மற்றும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் கலந்து கொண்டனர்.
டிரா மலேசிய தலைவர் சரவணன் சின்னப்பன் இந்த சந்திப்பில் இந்தியர்கள் எதிர் நோக்கி இருக்கும் குடியுரிமை மற்றும் பிறப்பு பத்திரம் குறித்து முழு விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

