
ஸ்ரீ மூடா, மார்ச் 11-
சுபாங் ஜெயா நகராண்மைக் கழக உறுப்பினர் துவான் ராமு நடராஜன் மற்றும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் இணைந்து பெண்கள் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.
நாட்டின் வளர்ச்சியில் பெண்கள் ஆற்றும் பங்கை அங்கீகரித்து பாராட்டும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.
அதன்படி இந்த நிகழ்ச்சியை நடத்த எடுத்த முயற்சி பாராட்டுக்குரியது என்று பிரகாஷ் தெரிவித்தார். இந்த நிகழ்வில் கவுன்சிலர் யோகேஸ்வரி உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்.

