கம்போங் பூங்கா ராயாவில் வாழ்ந்த 118 குடும்பங்கள் புதிய selangorku வீடுகளில் குடியேறுவார்கள்!

ஷா ஆலம், மார்ச் 11 –
சுங்கை பூலோ கம்போங் பூங்கா ராயாவில் வாழ்ந்த 118 குடும்பங்களுக்கு Rumah Selangorku புதிய வீடுகள் வழங்கப்படுகிறது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு இன்று அறிவித்தார்.

இந்த புதிய வீடுகளுக்கான உறுதி கடிதங்கள் அவர்களுக்கு இன்று முறையாக ஒப்படைக்கப்பட்டது. இங்கு வாழ்ந்த 118 குடும்பங்களுக்கும் வீடுகள் வழங்கப்படுகிறது. யாரும் விடுபடவில்லை.

இதில் முதல் கட்டமாக 36 குடும்பங்கள்
இஜோக் Alam Perdana, Puncak Alam என்ற இடத்தில் RM42,000 மதிப்புள்ள புதிய சிலாங்கூர் கூ வீடுகளில் குடியேறுவார்கள் என்று அவர் அறிவித்தார்.

மீதமுள்ள குடும்பங்கள் கட்டம் கட்டமாக புதிய வீடுகளில் குடியேறுவார்கள் கம்போங் பூங்கா ராயாவில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் இவர்கள் புதிய வீடுகளில் ஒரு மாதத்தில் குடியேறுகிறார்கள்.

இந்த புதிய வீட்டின் சந்தை விலை 1 லட்சத்து 50,000 வெள்ளி என்று சிலாங்கூர் சொத்துடமை வீடமைப்பு இலாகா மதிப்பிட்டுள்ளது. ஆனால் கம்போங் பூங்கா ராயா குடும்பங்களுக்கு 42,000 வெள்ளியில் மட்டுமே வழங்கப்படுகிறது என்றார்.

கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் கம்போங் பூங்கா ராயா மக்கள் பிரச்சினை இன்று நல்ல முறையில் தீர்க்கப்பட்டுள்ளது. மூன்று அறைகள், இரண்டு கழிப்பறைகள் கொண்ட இந்த வீடுகள் மிகவும் வசதியானவை என்று அவர் சொன்னார்.

இன்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ராயுடு அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
கோத்தா டாமன்சாரா சட்டமன்ற உறுப்பினர் Muhammad Izuan Kasim மற்றும் சுங்கை பூலோ நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் வழக்கறிஞர் சிவராசா, கிராமத் தலைவர் திருமதி தேவி, பூங்கா ராயா குடிப்பாளர்கள் சங்கத்தின் பொறுப்பாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles