

கிள்ளான் மார்ச் 11 –
கிள்ளான் நாடாளுமன்றம் சேவை மையம் ஏற்பாட்டில் “மீண்டும் பள்ளிக்குப் போகலாம்” நிகழ்ச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் தலைமையில் விமரிசையாக நடைபெற்றது.
குறைந்த வருமானம் பெறும் (B40) குடும்பத்தைச் சேர்ந்த 100 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டது.
சென்ற வாரம் முதல் கட்டமாக 60 மாணவர்களுக்கு பண்டமாரான், கிள்ளானில் RM150 மதிப்புள்ள பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது. இரண்டாவது கட்டமாக சென்ற சனிக்கிழமை மேலும் 40 மாணவர்களுக்கு பற்றுச்சீட்டு வழங்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிள்ளான் நாடாளுமன்றம் உறுப்பினர் மாண்புமிகு கணபதி ராவ் வீரமன் இந்த பற்றுச்சீட்டு அம்மாணவர்களிளன் சுமையை சிறிதளவு குறைக்க உதவும் என்று கூறினார்.
கிள்ளான் நாடாளுமன்றம் உறுப்பினரின் அரசியல் செயலாளர் திரு ரவீன்திரன் மற்றும் பண்டார் பாரு கிள்ளான் வட்டார இந்திய கிராமத் தலைவர் திரு அருள்நேசன் பங்கேற்று சிறப்பித்தனர்.

