
காஜாங் மார்ச் 13-
மைபிபிபி கட்சி இப்போது இடைக்கால தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா, உதவித் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி உட்பட உயர்மட்ட தலைவர்களின் கடுமையான உழைப்பில் மீண்டும் மக்களை நேரில் சந்தித்து சேவையாற்றி வருகிறது.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் மைபிபிபி கட்சி மீண்டும் ஒரு பலம் வாய்ந்த கட்சியாக உருவெடுக்கும் என்பதில் ஐயமில்லை. தருணத்தில் பத்திரிகையாளர்களுடன் இணைந்து சமூகபணி ஆற்ற மைபிபிபி கட்சி விரும்புகிறது என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவர் மற்றும் உலுவங்காட் தொகுதி தலைவருமான டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
உங்களுக்கு ஏதேனும் கேள்விகள் இருந்தால், கூடுதல் தகவல் தேவைப்பட்டால் அல்லது ஏதேனும் சாத்தியமான வாய்ப்புகள் அல்லது நிகழ்வுகளைப் பற்றி விவாதிக்க விரும்பினால், தயவுசெய்து எங்களை தொடர்பு கொள்ள தயங்க வேண்டாம். எங்களுடன் இணைந்ததற்கு மீண்டும் நன்றி, நாங்கள் உங்களுடன் இணைந்து வேலை செய்ய விரும்புகிறோம் என்று அவர் சொன்னார்.

