Taman Bukit YNS Labu வீடமைப்பு திட்டத்தில் வீடு வாங்கியவர்களின் புகார்களுக்கு முன்னுரிமை கொடுங்கள்!

லாபு, மார்ச் 13-
நெகிரி செம்பிலான் வீட்டுவசதி பிரிவு அதிகாரிகள் மற்றும் சிரம்பான் நகராண்மைக் கழக அதிகாரிகளுடன் (MBS) இணைந்து, Taman Bakti YNS, Labu இல் மேம்பாட்டு நிறுவனம் – வீடு வாங்கியவர்களை சந்திக்க நேர்ந்தது.

வீடமைப்பு திட்டத்தை செயல்படுத்துவதில் உள்ள சில புகார்கள் மற்றும் சிக்கல்களைக் கேட்டறிந்தேன் என்று நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார் தெரிவித்தார்.

வீடு வாங்கியவர்கள் அளிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு மேம்பாட்டாளரை கேட்டுக் கொண்டுள்ளேன்.அங்குள்ள சில பொது வசதிகளும் இன்னும் முழுமையடையவில்ல. ஏனெனில் அங்கு அபிவிருத்திகள் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படுகின்றன.

இருப்பினும் அனைத்து தேவைகளும் மேம்பாட்டு நிறுவனத்தால் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles