
பினாங்கு மார்ச் 13-
சிலாங்கூர் மாநிலத்தில் கெர்லிங் நகரில் விரைவில் அமையவிருக்கும் சைவத் திருக்கோயில் மற்றும் கல்லூரித் திட்டத்தை பினாங்கு மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு சோமு வரவேற்றுள்ளார்.
இந்நவீன காலத்தில், இந்துக்கள் தங்கள் மத நடவடிக்கைகளிலிருந்து விலகிக் கொண்டே செல்லும் இவ்வேளையில் அத்திட்டத்தை நடத்த முன்வந்த மலேசிய சைவ சமய மன்றத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் கூறிக்கொள்கிறேன்.
அத்தகைய முயற்சி நமது இளையத் தலைமுறையினருக்குச் சிறப்பு வாய்ந்த நமது இந்திய சமுதாயத்ததைப் பற்றிக் கற்றுக் கொள்ள ஓர் அறிய வாய்ப்பு வழங்குவதோடு மட்டுமல்லாது; நமது இந்து மதம் மேலோங்கி நிற்கவும் உதவுகிறது.
இம்முயற்சியை ஒரு முன்னுதாரணமாக எடுத்துக் கொண்டு மலேசியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பரிசீலிக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.
அதனை அடுத்து, பினாங்கு சிறப்பு தமிழ்ப்பள்ளிக் குழுவின் தலைவராக நமது இந்து சிறுவர்களுடையே சிறந்த சமய புரிதலையும் நற்பண்புகளையும் வளர்க்கத் தமிழ்ப்பள்ளிகள் இந்து சமயத்தைப் பற்றி சிறப்பு வகுப்புகள் மற்றும் திட்டங்களையும் மேற்கொள்வது போன்ற முயற்சிகளை எடுக்க முன்வருமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.
மேலும், பினாங்கு தமிழ்ப்பள்ளியின் சிறப்பு குழுவினராக சிறப்புக் கல்வித் தமிழ்ப்பள்ளியை (Sekolah Kebangsaan Jenis Kebangsaan Pendidikan Khas) உருவாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம்.
இத்திட்டம் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்கு தமிழ் மொழியில் கல்விக் கற்க மிகப்பெரிய பங்காற்றும்.
இந்த முயற்சி மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்குப் பல நன்மைகளை அளிக்க விருப்பதால், இத்திட்டத்தை மிக விரைவில் இதனை சார்ந்த உயர் அதிகாரிகளுக்கு, குறிப்பாக கல்வி அமைச்சுக்கு முன்மொழியவுள்ளேன் என்று அவர் சொன்னார்.

