பலத்த புயல் காற்றினால் தாமான் மந்தினில் சேதமுற்ற 20 வீடுகளை பழுது பார்க்க உத்தரவிட்டார் அருள்குமார்!

மந்தின், மார்ச் 14-
இன்று தாமான் மந்தினில் பலத்த புமல் காற்றினால் 20க்கும் மேற்பட்ட வீடுகளின் கூரைகள் பெரும் சேதம் அடைந்தன.

சம்பவத்தை கேள்விப்பட்டு உடனடியாக களம் இறங்கிய நெகிரி செம்பிலான் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் ஜெ அருள் குமார் கூரைகளை பழுதுபார்க்கும் பணியை தொடங்க 2 குத்தகையாளர்களை கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தக்க நேரத்தில் தங்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நீலாய் சட்டமன்ற உறுப்பினருமான அருள் குமாருக்கு பாதிக்கப்பட்ட மக்கள் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles