
கோலாலம்பூர் மார்ச் 14-
முதலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு குறைந்தபட்ச ஊதியத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்யும் என்று மனிதவளத்துறை அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
“இந்த ஆண்டு, தேசிய ஊதியக் கலந்தாய்வு கவுன்சில் சட்டம் 2011ன் அடிப்படையில், குறைந்தபட்ச ஊதிய விகிதம் கலந்தாய்வு மற்றும் மறுஆய்வு செய்யப்படும்.
“நாங்கள் நிச்சயமாக தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் உட்பட அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் Ahli Parlimen Batang Sadong, Rodiyah Sapiee (GPS)கூறிய பேங்க் நெகாரா அறிக்கை போன்ற சமூகப் பொருளாதார அறிக்கைகளையும் கவனத்தில் கொள்வோம் என்று இன்று நாடாளுமன்ற கூட்டத் தொடரில் அவர் சொன்னார்

