
பூச்சோங், மார்ச் 15-
பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு மாணவர்கள் உற்சாகத்துடன் பாடங்களை கற்று வருகின்றனர்.இந்த தருணத்தில் பூச்சோங் 14வது மைல் தமிழ்ப்பள்ளிக்கு புத்ரி ஏபிஎஸ் குழுமத்தின் தலைவர் டத்தோ ஏபி சிவம் இன்று சிறப்பு வகை புரிந்தார்.
இப்போது தமிழ்ப்பள்ளி மாணவர்கள் மத்தியில் வர்த்தக சிந்தனைகளை விதைக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.வர்த்தகம் என்ற தலைப்பில் மாணவர்களுடன் அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.
குறிப்பாக நம் சமுதாயம் வர்த்தகத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும்..
தமிழ்ப்ஸபள்ளி மாணவர்கள் எல்லா துறைகளும் சிறந்து விளங்க வேண்டும்.வருங்காலத்தில் ஒரு தொழில் முனைவராக தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

