நோன்பு பெருநாளை முன்னிட்டு 37,550 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகம்

ஷா ஆலம், மார்ச் 15-
நோன்பு பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு RM200 மதிப்பிலான 37,550 ஜோம் ஷோப்பிங் வவுச்சர்கள் விநியோகிக்கப்படும் என்று வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராயுடு தெரிவித்தார்.

சிலாங்கூரில் உள்ள 56 தொகுதிகளில் குறைந்த வருமானம் கொண்ட குழுக்களை இலக்காகக் கொண்ட இத்திட்டம் RM7.510 மில்லியன் ஒதுக்கீட்டை உள்ளடக்கியதாக பாப்பாராய்டு கூறினார்.

“வவுச்சர்கள் அனைத்து தொகுதிகளில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. விநியோக நடவடிக்கை சட்டமன்ற உறுப்பினர்கள் அல்லது பகுதி ஒருங்கிணைப்பாளர்கள் மூலம் மேற்கொள்ளப்படும்.

“வவுச்சர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையைப் பொறுத்தது. அனைத்து பெறுநர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் மற்றும் எதிர்காலத்தில் ஒப்படைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles