
கோலாலம்பூர் மார்ச் 16-
மலேசிய – சிங்கப்பூர் நாடுகளுக்கிடையே நல்ல தொழிலாளர் உறவுகளை உறுதிப்படுத்த உங்கள் முயற்சிகளுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகிறேன் என்று மனிதவள முன்னாள் அமைச்சர் வ. சிவகுமாரை சிங்கப்பூர் மனிதவள அமைச்சர் Tan See Leng பாராட்டியுள்ளார்.
உங்களின் தலைமையின் கீழ், மனித மூலதன மேம்பாடு மற்றும் பணியாளர்களின் இன்பம் போன்ற தலைப்புகளில் சிறந்த நடைமுறைகளைப் பகிர்வதன் மூலம் நமது நாடுகள் பயனடைந்தன.
பரஸ்பரம் தொடர்ந்து கற்றுக்கொண்டு இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன். உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தின் நல்ல ஆரோக்கியத்திற்காகவும், உங்கள் எதிர்கால முயற்சிகளில் ஒவ்வொரு வெற்றிக்காகவும் எனது நல்வாழ்த்துக்களை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினர் சிவகுமாருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் அவர் இதனை கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.