
புத்ராஜெயா, மார்ச் 16 – ஊழல் ஈடுபட்ட ‘டத்தோ’ விருது கொண்ட இருவர் உட்பட மூன்று நிறுவன உரிமையாளர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்.ஏ.சி.சி.) கைது செய்துள்ளது.
அந்த மூன்று பேரும் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் எம் ஏ.சி.சி. தலைமையகத்தில் தடுத்து வைக்கப்பட்டதாக வட்டாரம் ஒன்று கூறியது.
கடந்த 2018 முதல் 2023 வரை நாட்டின் நுழைவாயில்கள் வழியாக மேற்கொள்ளப்பட்ட புகையிலை, சிகரெட் மற்றும் மதுபானம் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதைத் தவிர்ப்பதற்காக அரசு ஊழியர்களுக்கு அம்மூவரும் லஞ்சம் கொடுத்ததாக நம்பப்படுகிறது.

