

கோலாலம்பூர் மார்ச் 16-
Jalan Menteri (Parlimen Titiwangsa) குடியிருப்பாளர்கள் மற்றும் வணிகர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களைக் கேட்க விலாயா மாநில மைபிபிபி தலைவர் சத்திய சுதாகரன் இன்று நேரடியாக களம் இறங்கினார்.
நில உரிமையாளர் இடத்தை காலி செய்யுமாறு நோட்டீஸ் அனுப்பியதால் அவர்கள் வருமானத்தை இழக்க நேரிடும். இந்த விவகாரம் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும்.
Titiwangsa நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஜோகாரி அப்துல் கனி மற்றும் DBKL பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு அல்லது மாற்று வணிக இடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று சத்திய சுதாகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.