
காஜாங் மார்ச் 16-
செமினி வட்டாரத்தை சேர்ந்த தனித்து வாழும் இந்திய மாதுவின் இரண்டு பிள்ளைகள் கல்விக்கு உதவும் வகையில் உலுலங்காட் மைபிபிபி தொகுதி தலைவர் டாக்டர் சுரேந்திரன் ஒரு கணிசமான தொகையை கொடுத்து உதவி புரிந்துள்ளார்.
இவரின் பிள்ளைகள் புத்தகம் வாங்குவதற்கும் பள்ளி கட்டணத்தை செலுத்தும வகையில் இந்த நிதி வழங்கப்பட்டது என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
மைபிபிபி கட்சி நாடு தழுவிய அளவில் ஏழை மாணவர்களுக்கு உதவி புரிந்துள்ளது என்று சிலாங்கூர் மாநில மைபிபிபி உதவித் தலைவருமான அவர் சொன்னார்.