
தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது. தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது.
இந்த தேர்தலில் எப்படியாவது 400 தொகுதிகளை பெற பாஜக தீவிரம் காட்டுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமானத் தொகுதிகளை பெற்றால்தான் 400-ஐ எட்ட முடியும் என்ற நிலை உள்ளது.
அமேதியில் ஸ்மிருதி இரானியை நிறுத்தி, ராகுல் காந்தியை தோற்கடித்தது போல தூத்துக்குடியில் திமுக எம்.பி. கனிமொழியை தோற்கடிக்க கட்சி விரும்புகிறது. ஆனால் ராதிகா, விருதுநகரில் போட்டியிட விரும்புகிறார்