பொன் வேதமூர்த்தி இல்லத்தில் அம்னோ அகமட் ஜாஹிட் ஹமிடி! அரசியலில் பெரும் திருப்பம்

மலேசியா மேம்பாட்டு கட்சி தலைவர் செனட்டர் பொன் வேதமூர்த்தி இல்லத்தில் நேற்று நடைபெற்ற தீபாவளி உச்சரிப்பில் அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி கலந்து கொண்டார்.

இவரின் இந்த வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டின் 15 ஆவது பொதுத் தேர்தலை நோக்கி தேசிய முன்னணி காய்களை நகர்த்தி வருகிறது.

தேசிய முன்னணியை ஆதரிக்கும் கிம்மா, மக்கள் சக்தி மற்றும் ஐபிஏப் போன்ற தோழமை நண்பர்களுக்கு இம்முறை போட்டியிட தொகுதிகள் வழங்கப்படலாம்.

அந்த வகையில் பொன் வேதமூர்த்தியும் தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

ஒருவேளை பொன் வேதமூர்த்தி இந்த தேர்தலில் தேசிய முன்னணிக்கு சாதகமாக பிரச்சாரம் செய்யலாம்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles