
பினாங்கு மாநிலத்தில்
கடந்த 1886 ஆம் ஆண்டு பதிவு பெற்ற நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலயமாகக் கருதப்படும் பினாந்தி ஸ்ரீ மகா முத்து மாரியம்மன் ஆலயத்தை பினாங்கு மாநிலத்தில் பாதுகாக்கப்பட்ட
பாரம்பரிய சின்னமாகப் பதிவு பெற பினாங்கு துணை முதலமைச்சர் பேராசிரியர் ப.இராமசாமி பெரும் ஆதரவு வழங்கி இருப்பதாக ஆலய ஒருங்கிணைப்பாளர் பாலன் நம்பியார் தெரிவித்தார்.
இந்நிலையில் நேற்று பினாந்தி தோட்ட முத்து மாரியம்மன் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பிரார்த்தனை மிகவும் விமரிசையாக நடைபெற்றது.
50க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை புரிந்து சிறப்பு பிரச்சனையில் கலந்து கொண்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

