
பாசிர் கூடாங் மார்ச் 17-
ஒன்றரை வயது நிரம்பிய ஆண் குழந்தையின் கழுத்தை அறுத்து அதனை புகைப்படம் எடுத்து கணவருக்கு whatsappல் அனுப்பி வைத்த மனைவியின் கொடூர செயல் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.
நெஞ்சை பதற வைக்கும் இந்த கொடூர சம்பவம் நேற்று சனிக்கிழமை பாசிர் கூடங்கில் வீடமைப்பு பகுதியில் நிகழ்ந்ததாக ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் எம் குமார் தெரிவித்தார்
தகவல் அறிந்து அந்த வீட்டுக்குச் சென்ற போலீசார் அப்பெண்ணை கைது செய்தனர். குழந்தையின் கழுத்து அறுக்க பயன்படுத்தப்பட்ட கத்தியையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர் என்று அவர் சொன்னார்.