
கோலாலம்பூர்: March 19- அரசியல் கட்சிகளால் பணியமர்த்தப்படும் தொழிலாளர்களின் உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறுகிறார்.
சம்பளம் வழங்குவதற்கான உரிமையும் இதில் உள்ளடங்கும் என்று கூறிய அவர், அவ்வாறு வழங்கத் தவறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
“எங்கள் நாட்டில் சட்டங்கள் மற்றும் நிறுவனங்கள் உள்ளன – தனியார் அல்லது பொது – மாநில அல்லது அரசியல் கட்சியைப் பொருட்படுத்தாமல், அனைவரும் சட்டத்தைப் பின்பற்ற வேண்டும். ஒவ்வொரு தொழிலாளியும் அவர்களின் சம்பளத்திற்கு தகுதியானவர்.
சட்டத்தை நிலைநிறுத்துவதில் அமைச்சகம் உறுதியாக இருப்பதால் இதை இலகுவாக எடுத்துக் கொள்ள வேண்டாம், ”என்று திவான் ராக்யாட்டில் (Dewan Rakyat on Tuesday March 19) கேள்வி நேரத்தில் அவர் கூறினார்

