
பண்டான் ஜெயா, மார்ச் 19-
கம்போங் பண்டான் அருகில் உள்ள பண்டான் ஜெயாவில் அண்மையில் ஏற்பட்ட தீ விபத்தில் திருமதி சுசிலாவின் வீடும் சேதமுற்றது.
இவரின் பிள்ளை ஆட்டிஸம் பாதிக்கப்பட்டவர். கணவர் பக்கவாதம் நோயால் சிகிச்சை பெற்று வருகிறார்.
குறைந்த வருமானம் பெறும் சுசிலாவின் குடும்பத்திற்கு உதவும் வகையில் சிலாங்கூர் மாநில மைபிபிபி தலைவர் டாக்டர் சுரேந்திரன் நேரடியாக அவரின் இல்லத்திற்கு விரைந்து நிதியுதவியை வழங்கினார்.
சமூக சேவையாளர் தேவேந்திரன் மற்றும் பாங்கி மைபிபிபி தொகுதி தலைவர் குமார் ஆகியோரும் உடன் இருந்தனர்.